கிருஷ்ணகிரி செப் 2-
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வடக்கு ஓன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற திமுக. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பர்கூரில் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் தெற்கு ஓன்றிய திமுக சார்பில் அஞ்சூரில் திமுக பொது உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, அவைத் தலைவர் ஏ.சி.நாகராஜ் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட அமைத்தலைவர் நாகராசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன் சுகவனம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் மாநில மகளீர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் திருமதி. மாலதி நாராயணசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் அறிஞர், மாவட்ட மகளிர் அமைப்பாளர் லட்சுமி பிரியா தேவராஜ் ஆகியோர் முன்னிலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட திமுக கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த கூட்டத்தின் போது திமுகவின் வரலாறு குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைத்து கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் ,வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் இருந்தாலும் சரி , சட்டமன்ற தேர்தாலாக இருந்தாலும் திமுக வெற்றி வாகை சூடும் வகையில் கழக உடன்பிறப்புகள் சிறப்பாக பணியாற்றிட இப்போதே இருந்து தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும், தமிழக முதல்வர் செய்துள்ள சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து வருகின்ற சட்ட மன்றத் தேர்தல் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற செய்து தமிழக முதல்வரின் கனவினை நிறைவேற்ற வேண்டும், திமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்த
பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பது
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, மேலும் இந்த கூட்டத்தின் போது மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பாலாஜி, தொகுதி பொறுப்பாளர் அன்பரசன், மாவட்ட துணைச் செயலாளர் சாவித்திரி,நகர செயலாளர் செயலாளர் வெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், அஸ்லாம், ஒன்றிய துணை செயலாளர் மீனாட்சி தங்கமணி, மாவட்ட பொருளாளர் கதிரவன், துணை அமைப்பாளர் கண்ணையன், ஒன்றிய துணை செயலாளர் ராஜதுரை,ஒன்றிய பொருளாளர் குப்புசாமி, மாவட்ட மகளிர் அணி தொண்டரணி அமைப்பாளர் திருமதி புஷ்பா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Tags
விளையாட்டு