கன்னியாகுமரி மாவட்டம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிலையத்தில் குழித்துறை நகராட்சியால் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் புறக்கணிப்பதோடு.
கமிஷன் பெறக்கூடிய பணிகளை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டு மிக முக்கியமான அடிப்படை தேவையான வசதிகளை செய்ய மறுத்து வருகிறது.
குறிப்பாக
நூற்றுக்கணக்கான மாற்றுத்திறன் படைத்தோர்
வயோதிகர்
உடல் பலவீனமானவர்
மகளிர்
எப்போதும் புழங்கும் இந்த பேருந்து நிலையத்தில் அமர்வதற்காக போதிய இருக்க வசதிகள் இல்லை. நூற்றுக்கணக்கானோர் நின்று கொண்டே அல்லல்படும் நிலை தொடர்கிறது.
அதே நேரத்தில்
நகராட்சி நிர்வாகம். பேருந்து நிலைய கடைகளுக்குமுன்பு 2 அடிவிட்டு அக்கிரமிப்பு அகற்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு சாராரிடம் இருந்து புரோக்கர்கள் மூலம் லஞ்சப் பணம் பெற்று ஒரு சில கடைகளை ஆக்கிரமிப்பு அகற்றாமல் முறைகேடு நடந்துள்ளது
கடைகளை வாடகைக்கு விடுவதும்.
புதிய கடைகளை வாடகைக்கு கட்டுவதும்.
இருக்கும் கடைகளை லஞ்சம் கொடுப்பவருக்கு வசதியாக மறுசீரமைப்பு செய்வது.
ஊழல் செய்யும் நோக்கில் சட்ட விதிமுறைகள் மீறி ஏலம் மற்றும் உரிமைகள் ஒரு சாராருக்கு ஆதரவாக வும் செயல்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.
வாகனம் நிறுத்தங்கள் தொடர்பாக தொடர்ந்து விதிமீறல்கள் பொது மக்களுக்கு மிக இடையுறு ஏற்படுத்தி முறைகேடுகள் தொடர்கிறது. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தன் கட்டுப்பாட்டில் குழித்துறை நகராட்சி கடைகள் சம்பந்தமான கோப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதோடு.
Tags
திருவண்ணாமலை