பென்னாகரம், செப்.22:
பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியது பாமகவா, திமுகவா என இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு நுழைவு வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை அணை தடுத்து பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிக்கென கடந்த 2019 ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூம் 4.50 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று. பென்னாகரம் பேருந்து நிலைய பணி 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் கூடுதலாக தரைத்தளம் உள்ளிட்ட இதர பணிகளுக்காக பேரூராட்சிகளின் பொது நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு நுழைவு வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. நுழைவு வாயில் அமைப்பதற்கு திமுக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து விவசாயிகள் தொழிலாளர்கள் அணி துணை தலைவர் பி.என்.பி. இன்பசேகரன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பூமி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து போது, பாமகவினர் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி ரூ. 39 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பூமி பூஜைக்கு முறையான அழைப்பு விடுக்காமல் நுழைவு வாயில் அமைப்பதற்கான பணியினை திமுக மறைமுகமாக செய்வதாக தெரிவித்து தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையிலான இருவருக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பூமி பூஜை அமைக்கப்பட உள்ள இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பாமக பிரமுகர்கள் பேருந்து நிலையத்தில் நுழைவு வாயிலின் முன்பு நிறுத்தினர். நீண்ட நேரமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்ட போது பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த திமுக நிர்வாகியின் காரை பாமகவினர் தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக, பாமகவினரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பூமி பூஜை நிகழ்வை தற்காலிகமாக நிறுத்துவதாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திமுகவினர் அங்கிருந்து திரும்பி சென்றனர். இருப்பினும் பாமக தரப்பினர் தொடர்ந்து காவல்துறையினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags
அரசியல்