சேலம் செப் 14-
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் 11 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நாலெட்ஜ் குழுமத்தின் அறக்கட்டளை செயலாளர் முனைவர் குமார் விழாவிற்கு தலைமை தாங்கினார்.எஸ்.ஆர். எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் முத்தமிழ்செல்வன், மற்றும் நல்லாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செந்தில் பரமசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். சுமார் 500 பொறியியல் மற்றும், மேலாண்மை துறை, மாணவர்களுக்கு இளங்கலை, மற்றும் முதுகலை பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் தரவரிசை பட்டியலில் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த 23 மாணவர்களுக்கும், பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனிவாசன் 2023 & 2024 ஆண்டு அறிக்கையை வாசித்து, கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தனர். இவ்விழாவில் கல்லூரி அறக்கட்டளையின் பொருளாளர் சுரேஷ்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குநகர்கள்,துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Tags
இந்தியா