சேலம் செப் 14-
சேலம் பொன்னம்மாப்பேட்டை ராஜசேகர் திருமண மண்டபத்தில் 9 ஆவது வார்டுக்குட்பட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவைத்தலைவர் முருகன், மாநகரப் பொருளாளர் ஷெரிஃப், பகுதி செயலாளர் கேபிள் ராஜா, 9- வது வார்டு கவுன்சிலர்
தெய்வலிங்கம், வார்டு செயலாளர் லோகு என்கிற லோகமுத்து, கவுன்சிலர் பச்சையம்மாள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் சம்பத், கோபால், மற்றும் கழக கோட்ட நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் திமுக வெற்றி பெற அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.
Tags
அரசியல்