தருமபுரி செப் 10:-
பெங்களூரு நாராயணா ஹெல்த் மருத்துவமனையில்
7 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
பெங்களூரு நாராயாணஹெல்த் மருத்துவமனையில் தர்மபுரி அடுத்த செல்லியம்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதுகுறித்து தர்மபுரியில் நேற்று நாராயாணா ெஹல்த் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் வருண் மஹாபலேஷ்வர், நிருபர்களிடம் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், செல்லியம்பட்டியை அடுத்த கொல்லஹள்ளியை சேர்ந்த ஆசிரியர் தம்பதி அருள் அந்தோணி, அருள் மலர் அரசி. இவர்களது மகன் ஆல்வின் ஆண்டோ டேனியல் (7). இவருக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு மஞ்சள் காமாலை அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவரின் பெற்றோர் நாட்டு வைத்தியம் செய்துள்ளனர்.
இதில் பலன் ஏற்படாடதுடன் ஆல்வின் ஆண்டோ டேனியல் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறியுள்ளது. இதையடுத்து ஆல்வின் ஆண்டோ டேனியலை அவரது பெற்றோர் பெங்களூரு நாராயாணா ெஹல்த் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்தனை செய்ததில் அவருக்கு வில்சன் என்ற அரிய வகை நோய் தாக்கியிருந்தது தெரியவந்தது. முறையான பரிசோதனைக்கு பின் ஆல்வின் ஆண்டோ டேனியலுக்கு, அவரது தாய் அருள் மலர் அரசியிடம் இருந்து கல்லீரல் பெறப்பட்டு, கல்லீரால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர் கண்காணிப்புக்கு பின் அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார் என்றார்.
தங்களது மகனின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, 21 லட்ச ரூபாயும், நான்கு மாதம் மருத்துவமனை அருகே தங்கி தொடர் சிகிச்சை உள்ளிட்டவைக்கு மொத்தம், 50 லட்ச ரூபாய் செலவானது என அருள் அந்தோணி, அருள் மலர் அரசி கூறினார்கள்.
Tags
இந்தியா