ஈரோடு-9.09.24
ஈரோட்டில் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவையின் முப்பெரும் விழா காளை மாட்டு சிலை அருகில் உள்ள சிம்னி ஹோட்டலில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் குறிஞ்சி சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில பொதுச் செயலாளர் சந்திரன் வரவேற்புரை யாற்றினார்.மாவட்டச் செயலாளர்கள் சந்தோஷ் குமார், தங்கமுத்து, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, தமாக மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், திருப்பூர், ஈரோடு மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன், கவுந்தப்பாடி போகர் சித்தர் முருகன் அருள் அபி சுவாமிகள், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி ராஜன், பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் முனுசாமி, கவுண்டர், இந்து சமத்துவ கட்சியின் மாநில தலைவர் விக்ரம் ஜி ,தமிழ்நாடு பண்டாரத்தார் முன்னேற்ற பேரவையின் மாநில தலைவர் தொல்காப்பியன், கோ.ஆப்ரேட்டிவ் சொசைட்டி எம் டி சிம்சன் தன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மேலும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவையின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும், தொண்டர்களும் பெருந்திரலாக கலந்து கொண்டனர். விழாவில் அரசு பள்ளியில் படித்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயமும், பரிசுகளும் வழங்கினர்.சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த ஏழு பழங்குடியினருக்கு வீரவணக்கம் செய்தனர். மேலும் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவையின் சார்பாக விழாவில்:
மத்திய மாநில அரசு DNT-DNC - பட்டியலில் உள்ள 27- வகையான குறவர், தப்ப குறவர் ,கந்தர்வகோட்டை குறவர், செட்டி குறவர் உள்ள அழைப்பு பெயர்களை நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொள்கிறோம்,
இந்திய சுதந்திரப் போரில் கிளர்ச்சி ஏற்படுத்தி உயிர் நீத்த 7- பழங்குடியினர் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பு தமிழக முதல்வர் வாரிசுதாரர்களை அழைத்து கௌரவ படுத்த வேண்டும் என்றும் 7- பழங்குடியினர் தியாகிகளின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவுத்தூணுக்கு சுதந்திர தினத்தன்று அஞ்சலி செலுத்தியும் தியாகிகளை கௌரவ படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்,
தாய்க்குடி தமிழ்குடி மூத்த குடி குன்றக்குறவன் சமுதாய மக்களை பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க தமிழக முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்,
தமிழக இந்து அறநிலையத்துறையின் உள்ள அனைத்து முருகன் வள்ளி திருக்கோயில் தாய்க்குடி தமிழ் குடி குன்றக்குறவன் சமுதாய மக்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் வழங்கிட வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்,
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழுவில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பிரநிதிதுவம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,
தமிழக பழங்குடியினர் (ST) பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ள குருவிக்காரர் என்கின்ற நரி- குறவர் என்ற பெயர் குறவன் சமுதாயத்திற்கு
மொழி, கலாச்சாரம் பண்பாடு என எள்ளளவு ஒப்பில்லாத பெயராகும்
குருவிக்காரர் சமுதாயத்துக்கு
நரிக் குறவர் என்ற பெயரும் இணைந்து இருப்பதினால் இரு வெவ்வேறு சமூகங்களுக்கும் சாதி / சமூக பதற்றம் உருவாகும் சூழல் உள்ளது. எனவே தாய்க்குடி தமிழ் குடி குறவன் என்ற பெயரை வட மாநிலத்திலிருந்து தமிழகத்திற்க்கு வருகை புரிந்த குருவிக்காரர் சமுதாயத்துக்கு வழங்கிட கூடாது உடனடியாக நரிகுறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கிட தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம். உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இறுதியாக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் நன்றியுரை யாற்றினார்.
Tags
விளையாட்டு